சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 211. “தேர்தல் வந்தால் வேட்பாளர்
தெரிவிப்பார்கள் சாதனையை
தேர்வின் பேறை பள்ளிகளில்
தெரிவிப்பார்கள் சாதனையாய்
ஊரில்தாமே பெரியவராய்
உலவும் சிலரின் சாதனையை
சாதி சமய மை பூசி
சமர்ப்பிப்பார்கள் அடியாள்கள்-
*
தேவைக்காக சாதனையை
தெரிவிப்பதுவும் முறையாமோ
சேவைக் என்று வருவோரின்
செயற்பாட்டாலே இனங்கண்டு
வேலைக் இவர்கள் பொருத்தமென
வைத்பார் தெரிந்து வாக்காளர்
நாளை என நாள் நகர்த்தாமல்
நன்றை செய்தல் சாதனையே!”
-எல்லாளன்