சந்தம் சிந்தும் கவிதை

எண்ணம்191-கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

எண்ணம்

எறும்புபோல் சுறுசுறுப்பு எமக்குள் இருந்தால்
உறுப்புகள் இயங்கும் உற்சாகம் பிறக்கும்
விறுவிறுப்பாய் எண்ணம் விரைந்து செயற்படும்
சுறுசுறுப்பு தன்னால சோர்வை அகற்றும்

எண்ணம் சிறகடிக்கும் இயலாமை தோற்கடிக்கும்
வண்ணத்துப் பூச்சியைப்போல் வட்டமிடும் சிந்தனைகள்
விண்ணைத் தொடும் விந்தைகள் வேகமாய்
வண்ணமாக உள்ளத்தில் வடிவமைக்கும் காட்சிகள்

இயலாமை என்ற எண்ணம் முயலாமை
சுயமாய் சிந்தித்து சோம்பலின்றி வாழ்வோமே….