உழைப்பாளர் கொண்டாடும் தினம்
உழைக்கும் மனித இனம்
உழைக்கும் கரங்கள் உயரும்
பிழைக்கும் வழிகள் புரியும்
வேலை தேடும் பட்டதாரிகள்
காலையில் வெளிக்கிட்டு தேடுகிறார்
உத்தியோகம் பார்ப்பதே கொள்கை
உத்தியை கையாள தெரியாத கிள்ளை
பட்டம் பெற்றவரும் செய்கிறார் விவசாயம்
படிக்காதவரும் செய்கிறார் விவசாயம்
விவசாயம் நன்றாக விளைந்தால்
விற்பன்னர் ஆகிடலம் வாழ்வில்
அன்றாடம் காய்ச்சிகள் ஏழைகள்
அன்று உணவிற்கே வழியில
லையெனில்
என்ன செய்வார் பசிக்கு
உழைப்பாளர் தினத்திலே
உரியமுறையில் நல்விளைவுகள்
இருந்தால்
மக்கள் மனதில் மகிழ்ச்சி
பொங்கிடுமே வாழ்வில்
உழைப்பாளிகளைப் போற்றுவோம்
உழைத்தே நாம் வாழ்ந்திடுவோம்