“ உழைக்கும் உழைப்பாளிகள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 02.05.2024
வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள்
உலகின் சுமையைத் தாங்கும் தூண்கள்
உங்கள் உழைப்பே உலக வாழ்வு
உழைப்பினால் மலர்கிறது எங்கள் வாழ்வு
உழைப்பினை மேன்மையாக்கும் தினமாம்
உழைப்பாளிகள் தினத்தில் உங்கள் நிலையினை
உன்னத தியாகத்தை நினைக்கிறோம் நாமும் !
உலக வரைபடத்தை காட்டுமே உங்கள் கைரேகை
உழைப்பைக் காட்டுமே கூன்விழுந்த முதுகும்
களையிழந்த முகமும் காய்த்துப் போன கைகளும்
சேற்றுவயலில் சாலையோரத்தில் சாக்கடைகளிலென
காற்றோடு காற்றாக உழைக்கும் உழைப்பாளிகளே
உங்கள் உழைப்பிற்கு விலை ஏதுமில்லை
உங்களுக்கு எதிரான சுரண்டல்களோ ஏராளம்
உங்கள் உழைப்பினைப் போற்றுகின்றோம் நாமும் !
குறைந்த ஊதியத்தினைக் கொடுத்து
நிறைந்த வேலையினை வாங்கி
உழைப்பும் உழைப்பவர் நிலையும் பரிதாபமே
உன்னத உழைப்பாளர்களே
உலகை ஆழும் வர்க்கம் நீவிரே
உரிமையோடு ஒற்றுமையாய் போராடுங்கள்
வெற்றியின் இலக்கு நிட்சயமே !