கவிதை 188
ஆகா வியப்பில் விழிகள்
தான் படிக்கா விட்டாலும்
தனதும் தமக்கையின் சேய்களையும்
கொழும்பில் படிக்க வைத்து உயர்த்திய
சிறியதாயார் அன்னலட்சுமி சிவதாசனே
தமக்கை இறந்ததும் கைம்பெண்ணாக
பெற்ற பிள்ளைகளோடு ஐந்து பெறாமகள்களையும்
சேர்த்து வளர்த்த திறமை கண்டு
இன்றும் வியப்பில் எனது விழிகள்
கணவனின் ஓய்வூதிய பணத்தில் தெகிவளையில்
கஞ்சிகுடித்தாவது பிள்ளைகளின் உயர்வில்
மகிழும் சின்னம்மாவுக்கு என்
மனமார்ந்த நன்றியும் சமர்ப்பணம்
நன்றி