வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 185
புழுதி வாரி எழும் மண்
வாசம்
தந்ததே புதுப் பாடல்
கேட்குதா தம்பி கேட்குதா?
பதில் சொல்லு சொல்லு!!

வானம் கறுக்க வேணும்
மழையில் நனைய வேணும்
பனி மழைபொழிய வேணும்
சறுக்கி விளையாட வேணும் !!

தாய் மொழி படிக்க வேணும்
உணர்வுடன் கதைக்க வேணும்
நன்றாக படிக்க வேணும்
எம் அறிவை வளர்க்க வேணும்

மரங்கள் வைக்க வேனும்
பூமி குளிர்ந்திட வேணும்
வனங்கள் பெருகிட வேணும்
மக்கள் மகிழ்ந்திட வேணும்
உனக்கும் ஆசை வந்ததா சொல்லு சொல்லு பதில் சொல்லு சொல்லு?