வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 210
ஒளியின்றி ஒளிர்வெங்கு
உறவை தேடும் உறவினர் மத்தியில்
ஒளிக்கீற்றையே காணவில்லையே
ஒளிர் எங்கு வரும் என்பதே கேள்வி
காலங்கள் கழிவது தான் நியதி

ஒளி இல்லையெனில் ஒளியேற்றி
எம் வேலையை செய்வதுபோல்
சூரியஒளி மறைந்து இருள் சூழ
தெருவெங்கும் செயற்கையாக ஒளிருதே

காசாவில் இரவு பகலாய் ஒளிருதே
ஆனால் மக்கள் அழிவுதான் தெரியுதே
ஒழிய ஒளிர்வு எங்கே என்று
தேடுதே உலகம்
நன்றி
வணக்கம்