வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 207
வாழ்க்கை
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டுமென அலைந்து
உயிரும் சொந்தமில்லையென உணர்ந்து
உலகை விட்டு செல்வதுதான் வாழ்க்கை

வாழ்க்கை என்னும் பூந்தோப்பில்
முட்களும் பூக்களும் உண்டு
முட்களை கடந்து பூக்களை இரசித்து
மகிழ்ந்து வாழப் பழகுவோம்

ஒவ்வொரு அனுபவமும்
ஒவ்வொரு பக்கமாய்
வாழ்க்கை என்னும் நூலில் வர
மகிழ்ந்தே வாழ்வோம்

நன்றி
வணக்கம்