வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 184
நண்பனின் பிரிவு

எங்கோ பிறந்தோம் நாம் இங்கு
சந்தித்தோமே அகதி முகாமில்
ஒன்றிணைந்தோம் நட்பாக கடைசி
இருமணி நேரம் மகிழ்வாக கதைத்தாயே
பிரிய வேண்டும் என்று பிரிந்தாயோ

உதவி என்று கேட்கமுன்
வந்து நின்று செய்வாயே
என்ன தொடர்போ என நினைப்பேனே
இன்றுவரை தொடர்ந்தோமே
முடிந்து போன கதையாச்சே

இனி காணாத உலகிற்கு
சென்றாயே அன்பு நண்பனே
சிரித்து சிரித்து கதைப்பாயே
நீ எடுத்த முடிவா
காலம் தந்த முடிவா

நன்றி
வணக்கம்