வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 199
அர்த்தமுள்ள இயற்கை
குளிர் சுமையாக வரும்பொழுது
இலைகளை விழுத்துகிறது மரம்
பழம் சாப்பிட வந்த பறவைகளை
மரங்கள் விரட்டியடிப்பதில்லை

நாம் காணும் அழகு ஓவியம்
இவ்வுலகில் வியக்கும் இயற்கை
வெய்யிலும் மழையும் மனிதன்
மனம்போல மாறிக்கொள்வது இயற்கை

நாம் செய்யும் தவறுகளை
பொறுத்தருளும் பூமித்தாய்
கோபம் வந்தவுடன் வெடித்து
சிதறுவதும் அர்த்தமுள்ள இயற்கை

நன்றி
வணக்கம்