வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

ஆசை

உலகம் இயங்க காரணம்
அதுவே அழியக் காரணம்
முனிவரின் தவம் கலைய காரணம்
மனித இனம் அழியவும் காரணம்

அளவோடு இருக்கையில்
உயர்வு உண்டு வாழ்க்கையில்
மீறிய ஆசையால் துன்பம் – அதை
விதி என்பார் எம்மவர்

மரணம் இயற்கை என்றாலும்
புகழாசையால் அழிந்தவர் பலர்
மக்களையும் சேர்த்து அழிப்பதா
புகழாசை என்பது என் எண்ணம்

நன்றி
வணக்கம்