உன் நினைவுகள்
முப்பத்தைந்து வருடங்கள் ஓடியதோ
உணவு நீரின்றி பன்னிரண்டு தினங்கள்
நன் நோக்குடன் செய்த தியாகம்
வீணானதோ என வினா வந்ததே
இல்லை எனக் கூறும் அரசியல் கட்சிகள்
உன் நினைவு நாளை வைத்து அடிபட
உன் நல்நோக்கம் அதற்காகவா
என மக்களின் சிந்தனை
மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என
உறுதியாக நம்பிக்கை கொண்டாயே
இன்றோ எம்மினம் அப்பற்றின்றி
தங்களுக்குள் போராடும் என நினைத்தாயோ
நன்றி
வணக்கம்