வியாழன் கவிதை

இ. உருத்திரேஸ்வரன்

வணக்கம்
கவிதை 176
எரிந்த நூலகம்
1800 ம்ஆண்டின் யாழ் பத்திரிகைகள்
ஆறுமுக நாவலரின் புத்தகங்கள்
எழுத்தோலைகள் கையெழுத்து பிரதிகள்
ஓலைச்சுவடிகள் என அறிவின் கரு

வரலாற்று சுவட்டை அழித்தால்
அழிந்திடும் அந்த இனமே என
கோட்பாட்டை நிருபித்தே காட்டியது
சிங்கள காவல்துறை அன்று

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகம்
சாம்பலானதே 1981 மே 31 இல்
எரிந்த 97000 அரிய பொக்கிசங்கள்
மிச்சம் உள்ளது 41 வருட நினைவுகள்
நன்றி
வணக்கம்