வியாழன் கவிதை

இ. உருத்திரேஸ்வரன்

வணக்கம்
கவிதை 175
மே 18
குருதியில் நனைந்த தமிழினம்
கறுப்புநாளா சிவப்புநாள் என்பதா
மரண ஓலம் உலகை உலுக்கவில்லையா
கண்டும் காணாமல்தான் இருந்ததா

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று
சொல்லிக்கொண்டே காலம் கடந்தது
எம்மினத்தின் விதியா சாபமா
விடை தெரியாமல் இருக்கிறேன்

எமக்குள் நூலகஎரிப்பு கறுப்பு யூலை மே 18
எம்மினத்தின் துயர வாழ்வு தொடருதே
எமக்குள் ஒற்றுமையின்மையாலா திட்டங்கள்
இல்லாமையாலா மக்களின் அறியாமையாலா
யார் அறிவீர் விடை தருவீர் ஆவலுடன் நான்
நன்றி
வணக்கம்