கவிதை 174
நிலை மாறும் பசுமை
உயிரினங்கள் வாழ உண்டான
பசுமை உலகமே வனங்கள்
மனித பேராசையால் மறைய
வானமும் பொய்த்து போகுதே
மனிதன் ஆடரம்பத்தை விரும்பி
வீட்டுத் தோட்டத்தை கைவிட
நாடுகளோ ஒன்றை ஒன்றழிக்க
உலகில் ஏற்படுமே உணவு பஞ்சம்
காலநிலை மாறுபட
நீர்நிலைகள் வற்றிட
நிலங்கள் வெடித்து பாலைநிலமாக
நிலைமாறுமே பசுமை
நன்றி
வணக்கம்