வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 173
தாய்
தாய் என்னும் தீபம்
சுடர்விட்டு எரிவதால்
பாசமென்னும் ஒளி
மின்னுகிறது இவ்வுலகில்

துயரம் எத்தனை வந்தாலும்
தாயின் முகம் கண்டதும்
உலகை வெல்லும் வலிமை
வந்து விடுகிறது என்னுள்

எது பிடிக்கும் பிள்ளைக்கென
தெரிந்து வைப்பாள் அன்னை
சேயின் நலனுக்காய் செய்யும் தியாகம்
வேறு ஏதுமில்லை இத்தரணியில்
நன்றி
வணக்கம்