கவிதை 172
வேண்டும் வலிமை
வாழ்வில் வேண்டும் வலிமை
வஞ்சனை நிறைந்த உலகம்
நெஞ்சில் வேண்டும் வலிமை
வருங்காலம் உந்தன் கையில்
உடல் வலிமை குறைந்தாலும்
உள்ளத்தில் வலிமையிருந்தால்
தடையை தாண்டி வீறு நடை போட
தரணியும் உனது கையில்
தன்னை விட மற்றவரை
வலிமையாக்குவது உன் வலிமை
வலிகள் தாங்கும் வலிமையிருந்தால்
வசந்தமாகும் உந்தன் வாழ்க்கை
நன்றி
வணக்கம்