வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்

வேரோடு விழுதாக
விடுதலையின் வேள்வி தன்னில்
ஆகுதியாய் தமை ஈந்த
அரணான எம் மைந்தர்

சீராளும் பூமியிலே
சிரம் தந்து தமை ஈந்து
காடாளும் நிலை கண்டு
கன்ன்றெரியும் தீ சுமந்தோர்

தாய் மண்ணே தமக்கான
சேய் தாங்கும் பெரும் பணியாய்
களத்தினிலே பலம் கொண்டு
சமர்கண்டு தமை. ஈந்தோர்

தலை சாய்த்து வணங்குகின்றோம்
உம் விழுதுகளை நாம் சுமந்து
வழிகண்டு விழி மலர
வாழ்வமைப்பதுவும். நம் கடமை

வார்த்தைகளால் வருடாமல்
எம் செயல்கொண்டு துயர் களைந்து
மனிதம் காத்தோரை மாவீரக் கடவுளரை
எம் பெரும் பணி கொண்டு வணங்கி நிற்போம்