வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

பொய்யகற்றி. பொருள் கொடுப்போம்…………..

தாயகத்தின் உறவுகளை
காப்பதெங்கள் பணியென்று
சிறுகச்சிறுக. சேமித்தும்
உதவியெழும் உறவுகளே பெருநன்றி

பல்வேறு தளம் கொண்டு-தம்
நேசக்கரம் இணைக்கும் பெருந்தகையீர்
உம்மைத்தான் வேண்டுகின்றேன்
உண்மை விளம்பி உரைத்திடுவீர்

நம்பிக்கை மோசடிகள் நமக்குள்ளே
பேசும் வார்த்தைக்குள் பாசத்தை
கூட்டி எடுத்திழையும் நம்மவரை. நீவிர்
எதுவென நினைத்து. பெரும் கபடங்கள்

முகத்திரைகள் கிழியும் முடிவு. வரும்
ஏழைத்தாயவளின் கை கொடுக்க
நம்பி வந்த சிறு பொதிகள் உங்கள்
ஆடம்பர சொகுசுகளுள். பதுங்குவதோ

நாங்களெல்லாம் மூடரல்ல மூடரல்ல
யாவையும் அறிந்து கொள்வோம்
சிதைந்தழிவீர் உங்கள் சில்லறைத்தனத்தால்
இன்றே இன்றே சூது கபட நாடகங்கள்
ஏமாற்று
அத்தனையும் ஒழித்து நலன் செய்வீர்