வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

கல்லறை வீரரின். கனவிதுவோ…….

கல்லறை தாங்கும் வித்துடல்கள்
கருவறை தாங்கிய உறவறுத்து
கண்நிறை தாய்மடி தோள்தாங்கி
வித்துடலானார் உறவுகளே

அவர் நெஞ்சறை தாங்கிய
உணர்வலைகள். உயிர். எழுச்சி
மறந்து. நாம் இங்கு வாழ்வதுவோ
உறவுகள். கரைந்தழ. விடுவதுவோ

ஒற்றுமை. வேதம் உயிர் கலந்தார்
உயிர்ச்சிலுவை. சுமந்தவர் களம் கண்டார்
நிமிர்ந்து எழுந்தே நேசம் கொண்டு
தாய்த்தமிழ் ஒன்றே உயர்வென்றார்

தமிழே எங்கள் வாழ்வியலாய் -எம்
தலைமுறை காவும் உயிர்த்தொடராய்
தாயகம் நிலைத்தெழும் உறவுகளை
வாழும் வழிவகை. ஊன்றி எழ

சிறுவிரல் பிடித்ததொரு வாழ்வு சொல்வோம்
நமக்கும் அனைத்திலும் பங்குண்டு
அணைத்தவர் கரங்ஙளை அழைத்தெழுந்து
அன்பினில். இனியொரு விதி சமைப்போம்