ஒளியின்றி ஒளிர்வெங்கு……..
விழியின்றி. ஒளியில்லை
ஒளிர்வதற்கு. வழியுமில்லை
வழிகாட்டும் வாழ்வின்றேல்
ஒளிமுகத்தை உணர்வதெப்போ
தெளிவெழுதும் வார்த்தைகளும்
தென்றலொத்த தழுவல்களும்
கையிணைத்த உறவிணைவும்
ஒளிர்வெழுதி உயர்வு செப்பும்
பட்டுக்கும் பகட்டுக்கும்-தினம்
பவனிவரும். மாந்தர் முன்னே
அக ஒளியை. ஏற்றி வைக்கும்
அறிவின் விடியலைத்தான் ஒளிர்வென்போம்
தாழ்வின் பக்கலிலே தவிப்போர்க்கு
ஏற்றத்தின் சிறு பொறியை உணர்த்தி
தொடுபுள்ளி. இட்டெழுவோர் -ஆங்கு
பெரு வெளிச்சத்தின் சிறு பொறிகள்
ஆம் கருமைக்குள் கசங்கிவதோ
கவலைக்குள் மூழ்கிவதோ-நாம்
வாழப்பிறந்தவர்கள். பிறர்
வாழ்வுக்கும் வழி தொடுப்போர்
அகவொளி ஏற்றி விடியல் செய்வோம்