வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

எழுத்தறிவு. இல்லையெனில்……….

எழுத்தறிவு. இல்லையெனில்
மொழியறிவே கருவழியும்
மொழியமுதை சுவைத்தறிய
எழுத்தொலியின். வித்திடுவோம்

அனுபவத்தின். தெளிவதுவும்
ஆக்கத்தின் முதல் தொகுப்பும்
அனுதினமும் உரைத்தெழுதும்
மொழியமுதே உணர்வின் மொழி

எழுத்துக்குள் உயிர்ப்பிருக்கும்
ஏந்திவரும். சொல் இழைவில்
சொற்சுவையில். சொந்தம் வரும்
பேரழகை உயிர்ப்பெழுதும். மொழியே. பெருஞ்சிறப்பு

அகரத்துள் வேராகி. அகிலத்திள்
விரிவாகி. இலக்கியமாய் இசைந்து
உலகத்தின். பரப்பிலெல்லாம். உள் நுழைய
கருவாகி. கருத்தாகி. இழையும் எழுத்தறிவு