வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

என்று. தீருமோ……….,,

கரையும். விழியின். கடல் போல் நீரும்
தேடும் நெஞ்சின் ரணத்தின். வடுவும்
விடைகள் காணா. கேள்வியின். தொடுப்பும்
ஏதிலி. மனங்களின். எதிர்பார்ப்பின் வலியும்

என்று. தீருமோ. எது. விடை. வருமோ
கைக்குள். வளர்ந்த வாரிசு. மைந்தன்
கண்ணாய்க் காத்த. தோள் சாய் துணைவன்
துள்ளித். திரிந்த. எழிலாள் நங்கை

சென்ற இடத்தினை தேடி. அலைகிறார்
உயிர். துறந்தாரோ. உயிர். பிழைத்தாரோ
சிறையின். பிடியினில். துவண்டு. நிற்பாரோ
எங்கு. தேடுவேன் எவர் விடை. தருவார்

காலச்சுழலில். கரைந்து. மறைகிறார்
வாழ்வழி. தொலைத்து. வதங்கி. மடிகிறார்
தேடலில். தினம் தினம். தேம்பி. அழுகிறார்
விடைதர. இங்கு மானிடர். இல்லை

இவர். துன்பியல்்நாடகம். எப்போ. முடியும்
விழிமலர் துடைத்து. விடைதான்் வருமோ