வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

வாழ்வு ஒரு வட்டம்

புலரும் பொழுதுகளின்
எழில் வர்ணம் தீட்டி
இனிய தருணங்களை
எழுதி வரும் பெருவாழ்வு

மேடும் பள்ளமும். இங்கு
தீதும் இனிதுமென
தினமும் மாறி வரும்
எதிர் கொண்டெழுதல். பலம்

இன்று. வாழ்த்துதலும். -நாளை
தூற்றுதலும் அவரவர் எண்ணத்தில்
மனம் ஏற்று நலிந்தொழிந்தால்
நாமே துவண்டழுவோம்

பேதை. மனிதர்கள். நாம்
வாதை வலி சுமந்து நாம்
தோள்கள. வலுவிழந்து
பெரு வாழ்வை. வழியை அழிப்பதுவோ

நம்மை நாமுணரின்- நம்
பலத்தை வலுவெழுதின்
நேர்ந்த நிமிர் நடையும் -அந்த
செருக்கின். பெருமை. சொல்வோம்