வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

வரம் பெற்ற அகதிகள்……..

திசைகளெல்லாம் சிதறி நின்று
அகதிகளாய் முத்திரைக்குள் -தின
அவலங்களின். பின்னலிலே
அலட்சியத்தின். விதைகளாய் நாம்

குடும்பங்கள் குலைந்தன -நம்
மொழிமறந்து. மலைத்து நின்றோம்
விட்டெறிந்த. கற்களாய். நாம்
அடித்தளத்தை. தொலைத்து. நின்றோம்

உழைத்தோம் களைத்தோம் மலைத்தோம்
நிலைத்தோம் என்றால் நிலையில்லை
சளைத்தவர் நாமா. என்றலைந்தோம்
சகதிக்குள்ளும் பொன் நிறைத்தோம்

உயிர்ப்பினை கெடுத்து உயிர்நிலைத்தோம்
உறவின் நெருக்க வலுவிழந்தோம்-போலி
திரைக்குள் நாடக வாழ்வமைத்தோம்
சிறகுகள் விரிக்க குஞ்சிழந்தோம்

வரமும் சாபமும் நமக்குள்ளே
வலுவை. இழந்தவர் வாழ்விழந்தோம்
இழப்புத் நிலைப்பும். சீர்தூக்கின்
வரத்துள் தொலைந்த அகதிகள். நாம்