வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

வகுப்பறை ஆளுமைகள்……..

வலுவைக் கொடுத்து
வளத்தை. நிரப்பி
செழுமைக் குழந்தை
சீர்படப் பயில
தளத்தைத்தந்த. ஆளுமைகள்

தரிசு நிலத்தையும்
தங்கம் விளையும்
பசுமைச் செழிப்பை
நிறைத்து வளங்கிய
நன்றிக்குரியோர் பெருந்தகைகள்

விரலுள் நுழைந்து
வீரியம் நிறைத்து
உதிரக் கனலுள்
உயரிய நெறியை
படைத்துத் தந்த பயன் நிறைத்தோர்

கனிவாய்ப் பேசி
கனத்தை உணர்த்தி
சொல்லில் செயலை
செழிப்புற் வார்த்த
பெருமைக்குரிய. பேறுடையோர்

தன்னலமில்லா. சான்றோர்கள்
தக்கார் எங்கள் இதயத்துள்
பேசா நின்று பேசும் பொருளாய்
வாழ்நாள் முழுவதும் வணங்குதற்கு
உரியோர் உடையோர் நனிசிறந்தோர்