வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

கவிதை என்பது……….

கதையை மொழியாக்கி
மொழிதனை. வலுவாக்கி
வளமாய் மனமெழுத
எழுதும் கவிதை மொழி

கனக்கும். உணர்வுகளை
காதல். இரசனைகளை
தெறிக்கும். கனல் மொழியை
தெளிவாய். உரைத்தெழுதும்

வேதனைத்தீயின். மொழி
வேள்வித் தமிழின். குறி
ஏட்டின் வரி. இழைத்து
எழுதும். மனதின். மொழி

சிந்தும். மை உரைக்கும்
அவன் தன்வாழ்வின் கதையுமல்ல
உணர்ந்து எழுந்த. சிந்தை
உயிர்ப்பாய். பேசி. விழும்

அட. பேசின். உணரின் வெற்றி இங்கு
பேசா மொழியும்இங்கே
மனதைத் தைத்து வெல்லும்
கவிதை மனது தைக்க மொழியே நெய்தல் இடும்