வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

பேசாமல் பேசும் மொழி

உலகை உணர்வை
உயிர்ப்பின் எழிலை
விதைத்து விளைவாய்
கனியச் செய்வது மொழி

செவியும் நாவும் இழையா பொழுதில்
சேர்ந்து அணைத்து
சீர்படக் கலக்க
உளத்தைத் தொடுமே பேசா மொழி

விழியும் மொழியும் விரலுடன் தொடுத்து
விந்தையின் உணர்வை
மனதுள் தைத்து அழகாய்
அன்பாய்உரசித் தொடுக்கும் சைகை மொழி

உலகே உணரும் உன்னத வழி
பரிவுடன் பாசம்பயிலும் மொழி
எழிலைத் தொடுக்கும் ஏற்றப்படியாய்
எண்ணம்வரையும் சைகை மொழி

கற்றோர். மற்றோர் கதைக்கா மொழி
கனபரிமாண செழிப்பின் வழி
உணர்வின் தொடுதலில் உரைத்து எழுந்து
எல்லோர் இதயமும்தொட்டெழும் பொதுமொழி