நிலைதடுமாறுகிறேன்………
ஆம் வெள்ளி நரை
நடுங்கும் விரல்கள்
தள்ளாடும் கால்கள்
பலமிழந்து போனேனோ
நேற்றுவரை திடமாய்த்தானே
நிமிர்ந்து எழுந்து கணமும் ஓடி
கனவிலும் வேலை வேலையென
ஓடியதால் களைத்ததோ என்னுடல்
எனியென்ன செய்ய முடியாத போது
இதயம் கனக்கிறது பிள்ளை ஒருவழி
பெண்மகளோ தனிவழி அவர் வாழ்வின் வழி
கலங்கிய விழி கருமணி சும்ப்பதேது
இனி காத்துக் கிடந்து கரைவதால்
ஏதுபயன் என்சுமை சும்ப்பது நான்தானே
ஏன் உணரமறந்து தேவைகளின் தேடலில்
கரைந்து போனது வாழ்க்கையல்லவா
எதை மறந்தேன் எதை இழந்தேன்
களைந்ததும் களைத்ததும் எங்கே
ஏதேனும் எனக்காய் செய்தருக்கலாமோ
விரல் நடுங்க வியர்க்கிறது என்ன செய்ய…….