சிறகொடித்த. பறவையினம்
எழிலான பொழுதெழுதி
எதிர்பார்ப்பை மனதெழுதி
காலச்சுழல்தன்னை வளைத்து
மகிழ்வெழுதும் சிறு நொடிகள்
அத்தனையும் கலைத்தெழுதி
சிறு கூட்டைப் பிரித்தெடுத்து
சிறுகுஞ்சை. நசித்தமுக்கி அவன்தன்னை
சிறைப்பறவை ஆக்கிய பெருநொடிதாம்
காத்திருப்பே கனவாகி அவன்
மொழியும் குரல். ஏக்கமிட
நாளாகி. மாதம். வருடங்களாய்
ஏங்கிக். கழிக்கிறாள் நிதமுமாய்
இருப்பானா. பிழைப்பானா அன்றேல்
இறப்பேதும் நிகழ்ந்திருக்க. வாய்ப்புண்டோ
அறியாத. முடிவுகளால். அங்கலாய்ப்பு
மேலோங்க உயிர்க்கூடு சுமக்கிறாள் இவள்
தாய்ப்பறவைக்கும். பெருவலிதாம்
குஞ்சுக்கோ சூனியத்தின் சுழல்களுக்குள்
விடைபகர யார்வருவார் நவீன உலகில்
உரைக்காத. மறை மொழியாய் வாழ்வு