ஆற்றலும் ஆளுமையும் …….
பேராற்றல் மிக்கவனே மனிதன்
பேருண்மை புரிந்தெழுந்தால் பெருமை
விழுமியங்கள் கடந்தெழுந்து பதிக்கும்
வித்தகத்தின் தனித்துவமே செழுமை
தத்துவங்கள் நித்தமுமாய் பிறக்கும்
தனித்துவமே நிமிர்ந்தெழுத உழைக்கும்
வெற்றியினை பதித்தெழுதும் கரங்கள்
வேர்விட்டு விழுதுகளை. படைக்கும்
உந்தனை நீ உயிர்பபித்து எழுந்து
உள்ளாளும்உன் செழுமை வடித்து
விழுந்தெழுந்தும். வீரியத்தை இழக்கா
உயர் நிலையில் உன்னதங்கள் சிறக்கும்
ஆளைமையை உடையவனே மனிதன்
அதை ஆள்வதற்கும் பெரும் பலமே வேண்டும்
கற்றறிந்த வித்தையொடு உந்தன்
தனித்துவத்தின் புள்ளி தனைத் தொடுவாய்
இன்றல்ல வாழ்க்கையதன் பக்கம்
என்றென்றும் உன் சாதனையால். வாழ்வாய்