வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

நிழலாடும் நினைவுகள்

நிழலாடும் நினைவோடு
அனலேந்தும் கருவூலம்
அறிவென்ற. பெருஞ்சொத்தை
களவாடும். இழி. நோக்கு

முரணான சிந்தைக்குள்
தீப்பந்தின் கனலொன்று
அறிவாலயத்தின் அகங்கவ்வி
அழித்தெழுந்த ஆவணங்கள்

காலங்கள் உருண்்டோடும்
கனவுக்குள் சுமந்ததெல்லாம்
தமிழ்த்தாயை தோள்சுமக்க
இன்று உலகமெல்லாம் நம்தடங்கள்

அமிழ்தான மொழி கொண்டு
அரிச்சுவடி நிதம் தொடுத்து
பிறந்தாளும் குழந்தைக்கும் நம்
தமிழ் சுவைக்க. வழி நிறைப்போம்

விருப்போடு விரல் இழைத்து
திறன் கொண்டு திசை தொட்டால்
அறிவாலயத்தை நம் அகங்களெல்லாம்
வரங்களென. நல் வழித்தடம் தொடுமே