உழைப்பின் கைகளில்………
உழைப்பின். கைகளில் நித்தம்
நிதமும் செழித்து விளையும்
கரங்களில் தாமே. கருவும்
விளைந்து கனியும் பொலியும்
ஓடி ஓடித் தமையே நல்கி
குருதியும் வியர்வையும்
விதந்து அளித்தொரு
குவிந்த செழிப்பில் குவலயம் மலரும்
இணைந்த பின்னல்
இசைந்த நோக்கு
எளியோர் பெரியோர்
ஏந்திடும் நொடிகளில் பிறந்திடும் வாழ்வு
வரைபினில் ஒருவன்
வார்ப்பினில். மறுகரம்
வடித்தெழும் கைகள்
உலகினைப் படைத்தே உருவாக்கும்
ஆம் கதிரவன் முதலாய் நிலவாய்த் தொடரும்
உலகின் அத்தனை இழைவும்
கருத்தாய்ப் பின்னும் கனபரிமாணம்
உழைப்பால் நல்க. பிழைத்தெழும் வாழ்வு