வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

கனவுச்சாலை…………

விடியும். பொழுதுகளை
கனவுச் சுமை தாங்கி நிதம்
நினைவுப் பொதி சுமந்த
கழுதைகளாய். நகர்கின்றோம்

அழுத்தும் பெரும் சுமைகள்
அயர்ச்சிப் பணிச்சிலந்தி
அமுக்கும் பெரும் கடன்கள்
அனைத்தும் நம் தோளில்

விலக்க. நினைத்தாலும். இவை
விலகா. தோழர்களாய்
நாளைப் பொழுதுக்காய்
இன்றைத்தொலைத்தோடுகின்றோம்

வாழ்ந்த. பொழுதேது. நாம்
மகிழ்ந்தெழுதும். கணமேது
அலைந்து. களைத்து. மனம்
அயர்வின் தொடுபுள்ளி. தானேது

எமக்கேன் அமைதியில்லை
கனவுச்சாலைகளில். நாம் நிதமும்
புரவிச். சவாரிகளில். -எம்
புதையலைத். தொலைக்கின்றோம்

நிறைவைக். கொண்டெழுவோம்
விரவிக். கரம் இழைவோம்
உறவுப். பின்னலிலே. எம்
உயர்வின். வெற்றி கொள்வோம்