வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….

அன்னைக்கு அவள் அன்புக்கு -நிதம்
காத்தெழுதும் பரிவுக்கும் பண்புக்கும்
தலை கோதி வருடி எழும் நேசமிகு
அவள் வாழ்வுக்கும் நிகரேது உலகில்

எழுதாத. வேதம் அவள் – வாழ்வை
எழுதி வகுத்தெழுதும் -ஞானமும் அவளே
அட்சய பாத்திரமாய் நிறைந்தருளும்
அசராத அவள் பேரன்பின். பெரும் படைப்பு

திட்டமிட்டெழுதி வரும் நூலிழையின் பின்னல்
தெளிவாக மனதெழெதும்உறவில்
கரைந்தசையும் அவள் தொடுப்பு-நம்மை
வழுவாது வார்த்தெழுதும் வார்ப்பில்

சிதையாது சீர்தூக்கி சிறப்பாக்பி தினம்
செம்மையுறு வாழ்வாக்க வளமாக்க
தனையுருக்கி தளராது. விரைந்தெழுதும்
அவள் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும்

நிகருண்டோ அவனி தனில்………..