மௌனத்தைக் கிழித்தெறி
மௌனப்பூட்டுக்குள் உன்
எண்ணச்சிறகுகளை. சிறைப்படுத்தி
விரிந்த பரப்பின் எல்லைகள் தொடுவதற்கு
வாய்ப்பிருந்தும் வளமிழந்து முடங்குவதோ
ஊர் உலகுசமுதாயம் வரைமுறை
இவையெல்லாம் நீ தொடுப்பவை. தான்
உயர்ந்து நின்றால் உச்சி முகர்வதும்
அடங்கி நின்றால்அலட்சியமும் இயல்புதானே
கைகளுள் சென்று நிறைப்பாரென
பிரமித்து நின்றால்வெறும் பூஜ்ஜியம் நீ
விரல்களுக்கு பலம் கொடு
வீணர்கட்கு விடை பொடு
அதிசயங்களும். ஆச்சர்யங்களும் -உன்
செயல்களினால் மெருகு. பெறும்
நீயே உன்னை வினாக்குறிகளுக்குள்
பொறித்தெழுவாய் விழித்தெழுவார்கள்
என் ஒற்றைத்தடம் உருவாக்கிய பொறி
வெற்றித்தடம் விதைத்ததென்றால்
உன்னால் முடியாத்தேது நீ
பலம்மிக்கவள் அதை நீ உணர்ந்தெழுது