வியாழன் கவிதை

இரா்விஜயகௌரி

உயிர் நேயம்

வெந்து தணிந்து வேரற அழிந்து
சொத்து சுகமெலாம் விட்டே களைந்து
ஆதி முதலாய் அனைத்தும் தொலைத்து
தேடிய வாழ்விது அகதியின் முத்திரை

காலங்கள்ஓடின காவியமாயினர்
உதிரமெழுதிய உறவும் மறந்ததோ
பின்னிப் பிணைந்த பேருறவின் பெருந்தழை
ஏழைகளாயின் ஏங்கித் தவிப்பதோ

மானுடநேயம் நித்தமும் விதைத்து
கருணையின் தொடுகையின் -நம்
கரங்களை பிணைத்து உயிர்களை
வாடும்உயிர்களை காப்பதெம்கடமை

யாசகம் என்றோர் வாசகம் வேண்டாம்
யாவரும் நமது உறவெனக் கொண்டால்
இதயம் இழைந்தெழும். இறைபணி போல
மலரும் வாழ்வில்மணிவிளக்கெனக் கலப்போம்

நாமே கடவுளர்நல்லவை தொடுப்பின்
அவரே கருவறை கனிந்து கலந்தால்
உயிர் நேயம் என்பது உள்ளத் தொடுகை
உயரிய அன்பில் பிழைபட வரைவோம்