சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

ஒன்றுபட வேண்டும்
—————————-
ஒன்றுபட்டு எழுக தமிழால்
உண்டாம் யாவர்க்கும் பலன்
இன்று இல்லைத் தமிழர்க்கு
இணைந்த வாழ்வு எங்கும்

பொங்கி எழுந்தே வாதமிழா
பொறாமை அகற்றியே வாதமிழா
பொங்கும் கடலும் வீரம்சொல்லும்
புவனம் உனதாகும் வாதமிழா

எங்கள் தோழமை உலகறியும்
வங்கம் ஆண்ட நம்குடியே
பங்கம் வேண்டாம் பகையறு
எங்கும் எம்மினம் வாழ்ந்திடவே

மரபுகள் உருமாறித் தடுமாறும்
மாற்றான் கேளிக்கையில் நாமோ
விரயமாக விவாதம் கொண்டு
வீண்பழி கேட்க்க வேண்டுமோ

ஆதியில்க் குடிகள் ஒன்றே
ஆண்டவன் படைப்பில் ஒன்றே
பீதியில் மக்கள் இன்று
பிந்தலாட்ட அரசியல் கண்டு.

இராசையா கௌரிபாலா