தாயெனும் பெண்மை
————————
அன்னைக்கு நிகரான அன்பில் சகோதரி
தன்மையில் தாயுள்ளம் தானும் பெற்று
மென்மையாய் நடத்திடுவாள் முகம் மலர்ந்தே
வாண்மையில் நேருள்ளம் வாரி வழங்கிடுவாள்
தானுண்டு தனியாகவன்றி தன்பால் சுமையையும்
பேணுமவள் கைங்கரியம் போற்றிடத் தக்கதே
ஆசிகள் பெற்ற தங்கை தம்பியரை
கண்ணை இமைதானும் காப்பதுபோல் காத்திடுவாள்
மேன்மை உள்ளமது மேவி நிற்குது
நன்மை கொண்டு தோன்றிய மூலவேர்
தூய அன்பில் தூக்கி நின்றிடுவாள்
தரணியில் தெய்வமாய்த் தாயெனும் பெண்மை.