எதிர்ப்பலைகள்
———————
அலைய லையாய் மக்கள்
அணிகள் திரண்டு எதிர்ப்பில்
விலைகள் எல்லாம் ஏற்றம்
விவாதமாய் அரங்கில் இன்று
ஆளும் அரசும் முறைகேட்டில்
அசமந்தப் போக்கில் நாடும்
மாளும் கனவுகள் அதிகம்
மக்கள் திண்டாட்டம் அச்சத்தில்
உணர்வுகள் வேடிக்கை யாகவே
உறக்கம் இன்றிய ஆர்ப்பாட்டம்
பணமும் இன்றிப் பரிதாபமாய்
பட்டினி நோக்கிச் செல்கிறதே
அன்னியச் செலாவணி இல்லை
அடக்கு முறைத் திணிப்பும்
மன்னராட்சி எதிர்ப்பலை நோக்கி
மகுடவாசம் மண்ணில் ஒலித்தே
இராசையா கௌரிபாலா