சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

சித்திரையை வாரவேற்போம்
———————————

சித்திரைத் திங்கள் சிறப்பாய் வருகவே
எத்திசை யாவிலும் ஏற்றங்கள் பெற்றடவே
வித்தகம் செய்தே வினைகள் அறுப்பாயே
சித்தம் அதுவே சிறப்பு.

சிறப்புகள் யாவுந்தான் சீருடன் பெற்றுச்
சிறகடித்து வல்லவை சக்திபெற்று வந்தே
பிறக்கும் பொழுதுகள் பொன்னாக என்றும்
அறமும் பெருகிடும் அன்று.

ஊற்றுப் பெருக்காய் உலகில் அகதிகள்
தூற்றுவோம் போரையும் துப்பாக்கி இன்றியே
ஏற்றுவோம் நீதியை ஏற்றங்கள் காணவே
மாற்றல் உலக முறை.

முறைகளில் மாற்றங்கள் முற்றிலும் வேண்டும்
சிறைப்பட்ட மக்களின் சீரான வாழ்வில்
கறைகள் களைந்து களங்கமும் அற்றே
நிறைவாய் அமைந்திடுமே நாள்.

இராசையா கௌரிபாலா.