மார்கழி
————
கார்த்திகையில் காத்திருந்து
மார்கழி பூத்திருந்தாள்
தையவளிடம் கைகொடுத்து
தாகத்தைத் தீர்த்தாள்
மாரியில் பெய்த மழையால்
மாதமும் சிறந்ததே
வாரியிறைத்த நீரெல்லாம்
வாரணம் மேவிக் களிக்கவே
ஆற்றுநடை ஊற்றெடுத்து
ஆரவாரித்து கடலை அடைய
சோற்றிற்குப் பஞ்சமில்லை
சேதியெங்கும் விளைச்சல் கும்மியடி
திருவெம்பாவைக் காலம்
திருப்பள்ளி எழவே
அருவமாய் நாயகன் நான்முகன்
திருவடிகள் பக்தர்படை சூழ்ந்திடவே.
இராசையா கௌரிபாலா