சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கெளரிபாலா

எண்ணம்
————-
எண்ணம் நன்றாக ஏற்றம் உண்டுடாம்
வண்ணம் கொழிக்கும் வாழ்வு தனிலே
மண்ணில் பிறந்து மடியும் வரையும்
வெண்மை உளமாய் வாழ்வதே சிறப்பு

இன்பம் துன்பம் இறைவன் தருவதே
இன்னா செய்தார்க்கும் இனிதாய் என்றும்
பொன்னோ புகழோ பெருந்தகை யாவர்க்கும்
அன்பு ஒன்றே அரனாய் காக்கும்

விதைக்க விழுதாகும் வினைகள் இன்றி
அதையும் செய்ய
அறுவடையே வாழ்வில்
எதையும் தாங்கும்
எளிய மனமும்
வதைபடாது வற்றாத வறுமையிலும் ஏர்முனை.