சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கெளரிபாலா

உண்மைக் காதல்
உண்மை உறங்காத உன்னதம் காதலே
வெண்மை உளங்கள் வெகுமதி பெறுமாம்
சான்றாய் உலகிலே சார்புடன் என்நாளும்
வாழ்வார் காலத்தை வென்று.

உயிரான காதல் உறுதியாய் என்றும்
உளங்கள் இணைந்து உறவாகும் என்றும்
எள்ளிநகையாடா எவர் கண் படினும்
கணமே யுகமாகும் காண்.