சாந்தி
———
துன்பம் களைந்து துணிவு கொள்ள
இன்பம் மலரும் இனிமையில் சாந்தி
வன்மம் ஓய்ந்து வாய்மை வென்று
நன்மை பெருக நயம்பெறும் சாந்தி
காதல் கொள்ளக் கீதம் தருமே
மோதல் இன்றிய முகவரி பெறுமே
பாதனை வடித்திடப் பொறுமை வேண்டுமே
சாதல் வரினும் சாந்தி கொள்ளவே
எல்லாம் நன்மைக்கே எதிலும் திருப்தியாய்
வல்லமை அடைந்திட வளமாகச் சாந்தி
தொல்லைகள் நீங்கித் தன்னலம் பெற்றிடவும்
எல்லைகள் அற்ற ஆனந்தமே சாந்தி .