சந்தம் சிந்தும் கவிதை

“இயற்கை”—எல்லாளன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 229 “இயற்கை”. -நிலம் நீர் காற்று ஆகாயம்
நெருப் இவை ஐந்து ஆதாரம்
தினம் தான் சுற்றி சூரியனை
வலம் வரும் பூமி ஆண்டாக

இயற்கை ஓட்டம் இதுவாக
இரவும் பகலும் தினமாக
சுரக்கும் வெட்ப தட்பமென
சொரியும் நிலவை மாதமென.

விலங்கு,பறவை,பயிர்பச்சை
விதையில் கோடிகரு முட்டை
பலவாய் உலகில் நிதம்உதயம்
படையல் இயற்கை விதி நியமம்

கைரே கையிலே எதிர்காலம்
காண்டம் சந்ததி கதையாவும்
என்றோ தலையில் விதியாயும்
எழுதிய இயற்கை புதிராயும்

ஆன்மா கர்மா வினை என்று
ஆன்றோர் வழிவழி பலவுண்டு
வீணாம் புனைவு இவை என்று
விவா திப்போரும் இங்குண்டு.

உயிரை கருவாய் முதலாக்கி
உணர பெண் ஆண் பாலாக்கி
உருவில் குறி சூழ் உருவாக்கி
உலகில் இயற்கை இறையாகி
-எல்லாளன்-