சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

13.12.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-204
விருப்புத் தலைப்பு !
“ அலைபேசி அடிமை “

நட்புடனும் உறவுடனும் கூடி — மக்கள்
நல்ல கதைபேசி மகிழ்ந்த காலமெங்கே ….
வெட்டிகளை பார்த்துகேட்டு வீண்பொழுதை கழிக்காது
வீட்டுப்பாடம் சொல்லித் தந்த பெற்றோரெங்கே…

பட்டுக்குட்டி செல்லக்குட்டி மக்கள் மனைவி
பக்கத்தில் பாசமிகு தந்தை எங்கே…
கட்டிப்போட்டு ஆட்சி செய்யும் அலைபேசியால்
கண்கெட்டு இல்லம் ரெண்டுபட்டு தவிக்குதிங்கே …..

அம்மா அப்பா குழந்தைகளும் தனித்தனியே…
ஆளுக்கொரு மூலையிலே அமர்ந்தபடி சிரிக்க
சும்மா சும்மா கோபப்பட்டு சொர்க்கமும்
சுதந்திரமும் செல்பேசி என்று நினைக்க
நம்பவச்சி படுக்கிறதா பல்கதையை
பார்த்து
நல்ல பிள்ளை நாடகந்தான் நடிக்க

தெம்பு கொண்ட உள்ளங்களே திறமையோடு….
தெளிவு பெற்று வாழ்க்கைதான் நடத்து …!

நன்றி வணக்கம்🙏
கவித்திறனாய்வுக்கும் பாராட்டுக்கள்
பாவை அண்ணா🙏