சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-264.

கவித்தலைப்பு!
” விழிப்பு”

எப் பாலர்க்கும் வேண்டும்
விழிப்பு – மீண்டும்
இழந்த நாட்டை
மீட்க வேண்டும்
என்னும் விருப்பு!
அதற்காகக் கட்டாயம்
புலம்பெயர்ந்த
நம் தாய்த் தமிழ்
உறவுகளுக்கு வேண்டும்
விழிப்பு!

கொத்தணிக் குண்டுமழையில் – சிங்கள இனவெறியில்
பன்னாட்டுச்
சூழ்ச்சி வலையில்
தமிழ் இன அழிப்பை
மே 18 ஐ நினைத்து
எரியட்டும் விழிப்பு
எனும் நெருப்பு
பகை முடிக்க
எப்பொழுதும்
நமக்கு வேண்டும்
விழிப்பு!

. அபிராமி கவிதாசன்.
07.05.2024