சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்_264,
விருப்புத் தலைப்பு!
“தந்தையின் தவிப்பு”
பெருந்தமிழர்
பாவை ஜெயபாலன்
திருமதி கமலா
ஜெயபாலன்
வாழ்விணையர்
பெற்ற மகள்!
யெனி – எனும் – தேன்
கனியின் நகர்வும்
என் கவிதையின்
பகர்வும்
இதோ!
செந்தமிழ்த் தேன்மொழி
சிந்திடும் பைங்கிளி
மகளே- எங்கள்
உயிரே – அயல்
மனை புகுந்திடும்
அழகே – தூய
மலரே- அன்பினில்
விளைந்த முத்தே!
விழிமலர் நனைந்திட
வைத்தாய் – என்
நெஞ்சம் பதைத்திட
உருகிட விடை நீ
கொடுத்தாய் – தந்தை
சிந்தையில் ஆயிரம்
கனவுகள் மலரவே விதைத்தாய் – இன்று
நின்றன்- பிரிவினால்
என்னையே கொன்றாய் – அனிச்சப்
பூவினும்
மெல்லிய கன்னத்தில்
கொஞ்சிட சிரித்தாய்
உன் – மனத்தினில்
என்னையே பதித்தாய் – தங்கப்
படிவமாய்த் திரும்பியே
நடப்பாய் – இல்லறம்
சிறக்கவே – நல் திருக்குறள் நெறியைக்
கடைப்பிடிப்பாய்!
சாயல்மயில்
பேடையெனச் செல்வாய் – வாழ்வில்
யாவும் வெல்வாய்!
என்று வாழ்த்தியது
தந்தையின் மனமே
இக்கணமே!
-அபிராமி கவிதாசன்.
07.05.2024
e