சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்.

14.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -210
தலைப்பு !
“ஊக்கி “

தூண்டி எம்மில் துணிவை ஏற்றி
வேண்டின யாவும் விரும்பி ஊற்றி
ஆண்டிட வழிதந்த அம்மையப்பா சாற்றி
நீண்டுவாழ தொழுவேன் நித்தம் போற்றி

ஊக்கம் தந்தார் உழைக்க ஆசான்
தாக்க நிகழ்வில் தைரிய நண்பன்
ஏக்கம் போக்கி ஏந்தும் உறவு
காக்கும் எம்மை காலம் எல்லாம்
நன்றி 🙏
கவிஞர் பாவை அண்ணா அவர்களே🙏